Home

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்  
(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது; எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது. 35:18.....(ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)
by ck friends
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களுக்கு வணக்கத்துகுரிய தினமாக சனிக்கிழமையையும், கிறிஸ்தவர்களுக்கு வணக்கத்துக்குரிய தினமாக ஞாயிற்றுக்கிழமையையும் ஆக்கினான். நமக்கு முன் சென்ற சமுதாயமாகிய இவர்கள் வெள்ளிக்கிழமையை விட்டும் வழிதவற செய்து விட்டான். நமக்கு இத்தினத்தை தந்து நேர்வழியையும் காட்டினான். இதனால் வெள்ளிக்கிழமையை தொடர்ந்து வரக்கூடிய நாட்களாக சனி, ஞாயிற்றுக்கிழமையை ஆக்கினான். உலகத்துக்கு கடைசியாக அனுப்பப்பட்டவர்கள் நாமே! மறுமையில் படைப்பினங்களுக்கு மத்தியில் முதலில் விசாரணை செய்யப்படுபவர்களும் நாமே! (ஆதாரம் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி கூறுகின்ற பொழுது, சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும் (ஆதாரம்: முஸ்லிம்)
...
புனிதம் மிக்க இந்த நாளை சிலர் தூக்கத்திலும், பிரயாணத்திலும், விளையாட்டிலும் கழிப்பதோடு பெண்கள் கடைத்தெருக்களிலும், வீடு வாசல் சுத்தம் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். இந்த நாளின் மகத்துவத்தையும், சிறப்பையும் அறியாதவர்களாக கவனமின்மையாக இருக்கின்றார்கள். இவற்றை விட்டுவிட்டு இந்த நாளின் சிறப்பையும், நன்மையையும், மகத்துவத்தையும் அறிந்து இறைவனை வழிபடுவதிலும், அதிகம் திக்ர் செய்வதிலும் அதிகமதிகம் பிரார்திப்பதிலும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதிலும் ஈடுபட முயல வேண்டும்.

இமாம் இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இந்த நாளில் செய்யவேண்டிய சில வழிமுறைகளை காட்டித் தந்துள்ளார்கள். ஏனைய நாட்களை விடவும் குறிப்பாக இந்த நாளில் சில வணக்க வழிபாடுகளை குறிப்பிட்டு சிறப்பித்து மகத்துவப்படுத்தியுள்ளார்கள். மார்க்க அறிஞர்கள் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையா? அல்லது அரபா உடைய நாளா? என்பதில் கூட கருத்து வேறுபாடுபட்டுள்ளார்கள்.
by jafarulla ismail
 
1, யார் பஜ்ர் தொழுகையே விட்டாரோ அவரது முகத்திலிருந்து ஒளி எடுக்கப்படும்

2, யார் லுஹர் தொழுகையை விட்டாரோ அவரது ரிஜ்கிலிருந்து பரக்கத் எடுக்கப்படும்
...
3, யார் அஸர் தொழூகையை விட்டாரோ அவரது உடலிலிருந்து சத்து எடுக்கப்படும்

4, யார் மக்ரீப் தொழுகையை விட்டாரோ அவரது பிள்ளைகளிடமிருந்து அவர் பயன் பெறமாட்டார்

5, யார் இஷா தொழுகையை விட்டாரோ அவரது தூக்கத்திலுருந்து அமைதி எடுக்கப்படும்

{புகாரி,திர்மிதி}
by Aseer siddique
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மனிதனுடைய உள்ளத்தில் ஷைத்தானின் மூலம் ஒரு எண்ணமும்,மலக்கின் மூலம் ஒரு எண்ணமும் ஏற்படும்.
ஷைத்தான் மூலம் ஏற்படும் எண்ணம் உண்மையைப் பொய்யாக்கவும்,தீமையத்தூண்டும்.

... மலக்கின் மூலம் ஏற்படும் எண்ணம்
,உண்மையை உண்மை என்று ஏற்றுக்கொள்ளவும்,நன்மையையும் தூண்டும்.எனவே,யாருக்கு இந்த எண்ணம் ஏற்பட்டதோ அவர் இது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து ஏற்பட்டது என அறிந்து கொள்ளட்டும்.
அதற்காக அவர் அல்லாஹ்வை புகழவும்.

எவருக்கு இதற்கு மாற்றமான எண்ணம்(ஷைத்தானிய எண்ணம்)ஏற்பட்டதோ,அதற்காக எடுத்தெறியப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளவும் என்று கூறிய நபி ஸல் அவர்கள்
ஷைத்தான் உங்களுக்கு வறுமையைப் பற்றி அச்சுறுத்தி பாவங்கள் புரிய உங்களை ஏவுகிறான்.எனும் வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.#திர்மிதீ-2988
by Asha islam

உயர்வும் -தாழ்வும்...

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'அள்பா' என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. (ஒரு பயணத்தின் போது) கிராமவாசி ஒருவர் தம் (ஆறு வயதுக்குட்பட்ட) வாட்டசாட்டமான ஒட்டகத்தின் மீது வந்து நபிகளாரின் அந்த ஒட்டகத்தை முந்திச் சென்றார்.
...
இது முஸ்லிம்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. முஸ்லிம்கள் 'அள்பா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது' என்று கூறினர். (இதை அறிந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
''உலகில் உயர்ந்துவிடுகிற எந்தப் பொருளாயினும் நிச்சயமாக (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டுவருவதே அல்லாஹ்வின் நியதியாகும்'' என்று கூறினார்கள்

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி)
ஆதார நூல் : புஹாரி பாகம் 7 (Book :82)
ஹதிஸ் எண் : 6502
by Gulam Green